நாடாளுமன்ற தேர்தலுக்கு மெகா கூட்டணி அமைவது உறுதி என்றும், அமமுகவிற்கு ஒரு சதவீதம் கூட இடம் கிடையாது எனவும் எடப்பாடி பழனிசாமி உறுதிபட தெரிவித்துள்ளார்.
டெல்டா மாவட்டங்களில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாடு முழுவதும் பயிர் பாதிப்புகளை ஆய்வு செய்து சேதத்தை கணக்கிட்டு அரசு ஏக்கருக்கு ரூ.30,000 வழங்க வேண்டும் என வலியுறுத்தினார்.
பயிர் காப்பீடு காலத்தை நீட்டிக்க மத்திய அரசிடம் தமிழ்நாடு அரசு வலியுறுத்த வேண்டும் என்றும், ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.3000 நிவாரணமாக உயர்த்தி தர வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
தமிழகத்தில் போதைப்பொருள் தடையின்றி கிடைப்பதால் இளைய தலைமுறையினர் சீரழிந்து வருகின்றனர் என்று குற்றம்சாட்டிய ஈபிஎஸ், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு மக்கள் மகிழ்ச்சியாக இல்லை என்று விமர்சித்தார்.
2024 நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் மிகப்பெரிய மெகா கூட்டணி அமையும் என்றும், ஆனால் அதில் அமமுகவுக்கு ஒரு சதவீதம் கூட இடம் இல்லை என்று தெரிவித்தார்.
Leave a Reply