உதகை மே 8
நீலகிரி மாவட்டம் கூடலூர் உட்கோட்டம் மசினகுடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட
மசினகுடி பஜார் பகுதியில் காவல் துறையின் சார்பில் 06.05.2025 குற்ற சம்பவங்கள்
நடைபெறுவதை தடுக்கவும், கோடைவிழாக்காலங்களின் போது போக்குவரத்து நெரிசலை
சீர்செய்யவும், சுற்றுலா பயணிகள் எந்தவித சிரமமுமின்றி வந்து செல்ல ஏதுவாக இருக்கும்
வகையிலும், நகர் பகுதிக்குள் வன விலங்குகளின் நடமாட்டத்தை கண்காணிக்கவும் 16 அதிநவீன
வகை கண்காணிப்பு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது, இதனை நீலகிரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் நிஷா அவர்கள் தொடங்கி வைத்து பார்வையிட்டனர், உடன் காவல்துறை அதிகாரிகள் மற்றும் பலர் உள்ளனர், இந்த கண்காணிப்பு கேமராக்கள் மூலம்
மசினகுடி சுற்றுவட்டார பகுதியான 3 கி.மி. தொலைவு பகுதியை கண்காணிக்கப்படுகிறது. இந்த
கண்காணிப்பு கேமராக்களின் கட்டுப்பாட்டு அறை மசினகுடி காவல் நிலையத்திலிருந்து
செயல்பட்டு வருகிறது. காவல் துறையினரின் இந்த நடவடிக்கையின் மூலம் பொதுமக்கள் மிகுந்த மகிழ்சி அடைந்துள்ளனர். மசினகுடி பகுதியில் உள்ள பொதுமக்களின் வரவேற்பை பெற்றுள்ளது,