பெருநாழியில் புதிய பள்ளி நிர்வாகிகள் தேர்வு.

ராமநாதபுரம் மாவட்டம் பெருநாழியில் சத்திரிய இந்து நாடார் பள்ளிகள் அபிவிருத்தி சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. இதில் புதிய தலைவர் பழனி குமார், செயலாளர் எம்.பெத்துராஜூ, பொருளாளர் ஏ. ஜெகதீஷ் குமார் ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். அதனைத் தொடர்ந்து
சத்திரிய இந்து நாடார் உறவின்முறை பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் உறவின் முறைக்கு புதிய தலைவர் பாலமுருகன் செயலாளர் முத்துக்குமார் பொருளாளர் ஜெகதீஷ் குமார், ஆகியோர் தேர்வாகியுள்ளார் .
புதிய நிர்வாகிகளுக்கு அனைத்து உறுப்பினர்களும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.