கோவை நகரின் மைய பகுதியான பெரியகடைவீதி, மணி கூண்டு அருகில் பாரம்பரிய கைவினை கலைஞர்கள் உருவாக்கிய கலை பொருட்கள் விற்கும்,பூம்புகார் கைவினைப்பொருட்கள் விற்பனை நிலையம் உள்ளது, இது தமிழ்நாடு அரசின் கைத்திறன் தொழில்கள் வளர்ச்சிக்கழகம் சார்பில் நிர்வாகிக்கபடுகிறது. தமிழகத்தில் சென்னைக்கு அடுத்து கோவையில் இரண்டாவது பெரும் பூம்புகார் கைவினை பொருட்கள் விற்பனை நிலையமாக உள்ளது
இங்கே ஒவ்வொரு ஆண்டும் பண்டிகைக்காலங்களில் கண்காட்சிகளை நடத்தி வருகின்றனர் அதுபோன்று, இந்த ஆண்டும் நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு “கொலு பொம்மைகள்” சிறப்பு கண்காட்சி மற்றும் விற்பனையை செப் 16 முதல் 25 ம்தேதி வரை, பத்து நாட்களில் வாங்கும் கொலு பொம்மைகள், மற்றும் கலைபொருளுக்கு 10 சதவீதம் சிறப்பு தள்ளுபடியில் விற்பனை செய்யப்படும் என தெரிவித்தனர்.
இந்நிலையில் பூம்புகாரின் சிறப்பு கண்காட்சி விற்பனையை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி குத்துவிளக்கு ஏற்றி வைத்து முதல் விற்பனையை தொடங்கி வைத்தார்.
இக்கண்காட்சியில் தசாவதாரம், விநாயகர், அரண்மனை தர்பார்,, அஷ்டலட்சுமி, மும்மூர்த்திகள், திருப்பதி, குபேரன், வைகுண்ட பெருமாள், மைசூர்தசரா காட்சி பொம்மைகளுடன்,புதிய வரவாக விண்ணில் சந்திராயன்,ராக்கெட், தமிழர் கலாச்சாரம், எலிகள் நடன மொம்மையும் பள்ளிக்கூடம் மாதிரி, சோட்டாபீம் மொம்மை, உழவர்சந்தை மாதிரி, கிராமிய ஜல்லிகட்டு தஞ்சாவூர் பொம்மை, அரசியல் தலைவர்கள், ஆடும்குதிரை, மரபாச்சி பொம்மைகள், கொலு பரிசு பொருட்கள் என இன்னும் எராளமான பொருட்கள் விற்பனைக்கு வந்து உள்ளன.
இந்த பொம்மைகள், தமிழ்நாடு,பாண்டிச்சேரி, ஆந்திரா,கர்நாடகா,கொல்கத்தா,ராஜஸ்தான்,என பல்வேறு பகுதிகளிலிருந்து வரவழைக்கப்பட்டுள்ளன.
இக்கண்காட்சியில் 80 லட்சம் ரூபாய் க்கு விற்பனை ஆகும் என எதிர்பார்பதாகவும் , இந்த கைவினைப் பொருட்களை பொது மக்கள் வாங்கி பயன் பெறுவதுடன் இக்கலைப் பொருட்களை உற்பத்தி செய்யும் கைவினைஞர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த உதவிடவோம் என பூம்புகார் நிலைய பொறுப்பாளர் ஆனந்த் தெரிவித்தார்..
Leave a Reply