கிருஷ்ணா கோதாவரி ஆழ்கடல் பகுதிக்கு அருகில் ஆழமற்ற நீர்வெளியில் புதிய இயற்கை எரிவாயுவை ஆயில் இந்தியா நிறுவனம் கண்டுபிடித்துள்ளது.
சமீபத்தில் நடந்த ஏல சுற்றில் ஆயில் இந்தியா நிறுவனம் வென்ற ஆழமற்ற கடல் பகுதியில் இந்த கண்டுபிடிப்பு நிகழ்த்தப்பட்டுள்ளது. கோதாவரி-1 என்ற மதிப்பீட்டுக் கிணற்றில், இந்த எரிவாயு இருப்பு கண்டறியப்பட்டுள்ளது.
கடந்த 16ம் தேதி தொடங்கப்பட்ட தொடர் சோதனைகளின் போது இந்த கிணற்றில் இருந்து நாளொன்றுக்கு அதிகபட்சமாக 2 லட்சம் கன மீட்டர் இயற்கை எரிவாயு வெளியேறியுள்ளது. இந்தியாவின் உள்நாட்டு எரிசக்தித் தேவையைப் பூர்த்தி செய்யவும், இயற்கை எரிவாயு உற்பத்தியை அதிகரித்து வெளிநாட்டு இறக்குமதியைக் குறைக்கவும் இந்த புதிய கண்டுபிடிப்பு பெரிதும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது, ஆயில் இந்தியா நிறுவனம் இதன் அடுத்தடுத்த சோதனைகளை மேற்கொண்டு வருகிறது.







