ஸ்ரீ வெங்கடேஸ்வரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் சார்பில் தேசிய அறிவியல் தினவிழா

28.2.2024 அன்று ஸ்ரீ வெங்கடேஸ்வரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் சார்பில் தேசிய அறிவியல் தினவிழா கொண்டாடப்பட்டது இவ்விழாவில் காஞ்சி கோவில் மற்றும் கோபி பகுதியைச் சார்ந்த பள்ளிகளிருந்து சுமார் 200க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். பள்ளி மாணவர்களின் அறிவியல் ஆர்வத்தை ஊக்கப்படுத்தும் வகையில் பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டி, கவிதைப் போட்டி, ஓவியப் போட்டி மற்றும் வினாடி வினா நடத்தப்பட்டன இதில் பல்வேறு மாணவர்கள் கலந்து கொண்டனர். ஒவ்வொரு போட்டிகளிலும் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கபட்டது. இவ்விழாவில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் Dr. ஆ. மோகனசுந்தரம் மாணவர்களுக்கு தேசிய அறிவியல் தினத்தின் முக்கியதுவத்தை விளக்கி தலைமையுரை வழங்கினார் மற்றும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கல்வி குழுமத்தின் அறங்காவலர் திரு. கவியரசு சிறப்புரை வழங்கினார்.இவ்விழாவில் ஸ்ரீ வித்யாலயா மெட்ரிக் உயர்நிலைப்பள்ளி ஒட்டுமொத்த வெற்றியாளர் கோப்பையை வென்றது. கல்லூரியின் நுண்ணுயிரியல் துறை மாணவர்கள் பள்ளி மாணவர்களுக்காக கண்காட்சி ஒன்றினை ஏற்பாடு செய்திருந்தனர். முன்னதாக கல்லூரியின் முதன்மை செயல் அலுவலர் கவுதம் மாணவர்களின் கண்காட்சியினைத் துவக்கி வைத்தார். துறைத் தலைவர் முனைவர் மஞ்சு நிறைவில் நன்றி கூறினார். பேராசிரியர்கள் ஆரோக்யராஜ், அம்ருதா, சுபா, ஷாலினி மற்றும் மாலதி ஆகியோர் விழாவை ஒருங்கிணைத்தனர்.