குடியிருப்பு பகுதியிலுள்ள கண்காணிப்பு கேமராவில் மை பூசி மறைத்த மர்ம நபர்கள்.!!

கோவை கணபதி அருகில் உள்ள மணியக்காரன் பாளையத்தில் பல்வேறு இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அங்குள்ள குடியிருப்பு பகுதியில் பொருத்தப்பட்டுள்ள 2 கண்காணிப்பு கேமராவின் கண்ணாடியில் மை பூசி யாரோ அழித்துள்ளனர். இன்று அதிகாலை 4 மணி அளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இது பற்றி போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் வந்தது.போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் உத்தரவின் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இந்த செயலில் ஈடுபட்டது யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.கொள்ளையடிக்கும் நோக்கத்துடன் யாரோ இந்த சதி செயலில் ஈடுபட்டு இருப்பதாக தெரிகிறது.இவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.