ஓணம் பண்டிகை யொட்டி கோவையில் இருந்து ஷார்ஜாவுக்கு பறக்கும் முறுக்கு, சீடை..!

கோவை: ஓணம் பண்டிகையை முன்னிட்டு கோவையில் இருந்து ஷார்ஜாவுக்கு இயக்கப்படும் விமானத்தில் முறுக்கு, சீடை, எண்ணை பொருட்கள் அதிகளவில் புக்கிங் செய்யப்பட்டு வருகிறது.

தொழில் நகரமான கோவையில் இருந்து, ஷார்ஜாவுக்கு வாரத்தில் 5 நாட்களாக ஏர் அரேபியா, ஏர்லைன்ஸ் சார்பில் விமானம் இயக்கப்பட்டு வருகிறது. இந்த விமானத்தில் ஏராளமானோர் பயணித்து வருகின்றனர்.

இந்த விமானத்தில் ஒவ்வொரு முறையும், சராசரியாக 3 டன் சரக்குகள் ஏற்றி செல்லப்படுவது வழக்கம். பொதுவாக, காய்கறிகள் அதிகளவு புக்கிங் செய்யப்படும்.

ஆனால் கடந்த சில நாட்களாக முறுக்கு, சீடை, சமையல் எண்ணை உள்ளிட்ட உணவு பொருட்கள் அதிகளவு புக்கிங் செய்யப்படுகின்றன.