இங்கிலாந்தின் புதிய பிரதமர் ரிஷி சுனக்குடன் மோடி பேச்சு..!!

புதுடெல்லி: இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்குடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேசினார். இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்குடன் பிரதமர் மோடி தொலைபேசியில் நேற்று பேசினார்.

இதுகுறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘ரிஷி சுனக்குடன் பேசியதில் மகிழ்ச்சி. இங்கிலாந்து பிரதமராக பொறுப்பேற்றதற்கு அவருக்கு வாழ்த்துகள். எங்களது விரிவான மூலோபாய கூட்டாண்மை, பாதுகாப்பை மேலும் வலுப்படுத்த இணைந்து செயல்படுவோம். விரிவான மற்றும் சமநிலையான தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை முன்கூட்டியே முடிப்பதற்கான முக்கியத்துவத்தையும் நாங்கள் ஒப்புக்கொண்டோம்’ என்று பதிவிட்டுள்ளார். பிரதமர் மோடி தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தற்கு ரிஷி சுனக் நன்றி தெரிவித்துள்ளார்.