ரூ.70 கோடி செலவில் நடமாடும் மருத்துவ வாகன சேவை: சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்..!

சென்னை: மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் ரூ.70 கோடி செலவில் சென்னை மெரினாவில் நடமாடும் மருத்துவ வாகன சேவை திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடக்கி வைத்தார்.

ரூ.70 கோடி செலவில் 389 மருத்துவ வாகனங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் அவர் கொடியசைத்து தொடக்கி வைத்தார் .

நடமாடும் மருத்துவ வாகனத்தில் ஒரு மருத்துவர், ஒரு செவிலியர், ஒரு சுகாதார உதவியாளர் மற்றும் ஓட்டுநர் ஆகியோர் பணியில் இருப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் 80,000 கிராமங்களில் மருத்துவ வாகனம் மூலம் மாதந்தோறும் 40 மருத்துவ முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது .

தமிழகத்தில் உள்ள தொலை தூர கிராமப்புறங்களில் மருத்துவ சேவை அளிக்க வாகனங்கள் கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது .