புதிய கல்வி சூழலை உருவாக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, இந்தியா அறிவியல் நிறுவனம், எல்.எல் .எஸ் .சி லாரன்ஸ் பள்ளி வளாகத்தில், வானிலை காற்றாலை ஆய்வகம் துவங்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம் உதகையில் , எஸ்.வி.ஏ, தென் பிராந்திய தேசிய அறிமுக விழா,
இந்திய பள்ளி கல்வித் துறையில் எதிர்காலத்தை நோக்கிய மாற்றங்களை உருவாக்கும் நோக்குடன் அட்வான்ஸ் ஸ்கூல் விஷன் அலையன்ஸ், தொடங்கப்பட்டது. இந்த அமைப்பின் தென் பிராந்தியத்திற்கான தேசிய அறிமுக விழா, 2026 ஜனவரி 29 ஆம் தேதி உதகை லவ்டேல் லாரன்ஸ் பள்ளியின் அரங்கில் சிறப்பாக நடைபெற்றது.இந்த விழாவிற்கு லாரன்ஸ் பள்ளியின் தலைமை ஆசிரியர் DVS ராவ் மற்றும் துணைத் தலைமை ஆசிரியர் ராஜன் நாராயணன் முன்னிலை வகித்தனர்.இந்த முக்கியமான கல்வி நிகழ்வில் முதன்மை விருந்தினராக சஞ்சய் குமார், IAS,பள்ளி கல்வி மற்றும் எழுத்தறிவு துறை செயலாளர்,
கல்வி அமைச்சகம், இந்திய அரசு,கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.இந்த நிகழ்வின் போது, AŚVA அமைப்பின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.asva-alliance.com -ஐ அவர் தொடங்கி வைத்தார்.
தேசிய கல்விக் கொள்கை 2020 (NEP 2020) முன்வைக்கும் கற்றல் மாற்றங்களை நடைமுறைக்கு கொண்டு வருவதே AŚVA அமைப்பின் முதன்மை நோக்கமாகும். மனப்பாடக் கல்வியிலிருந்து புரிதல் அடிப்படையிலான கற்றலுக்கும், செயலற்ற வகுப்பறைகளிலிருந்து சிந்தனை மற்றும் செயலில் ஈடுபடும் கற்றலுக்கும் கல்வியை மாற்றுவது AŚVA-வின் முக்கியக் குறிக்கோளாகும்.புதிய கல்வி சூழலை உருவாக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, இந்திய அறிவியல் நிறுவனம் (IISc), பெங்களூரு, தி லாரன்ஸ் பள்ளி வளாகத்தில் அமைத்துள்ள வானிலை ஆய்வகமும் இந்த விழாவின் போது திறந்து வைக்கப்பட்டது. இதன் மூலம், தேசிய அளவிலான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு (R&D) நிறுவனங்கள் நேரடியாக பள்ளி கல்வியுடன் இணையும் புதிய கல்வி மாதிரி தொடங்கப்பட்டுள்ளது.
இதன் வழியாக மாணவர்கள் அனுபவம் மற்றும் திறன் அடிப்படையிலான கற்றலை நேரடியாக அனுபவிக்கும் வாய்ப்பை பெறுவார்கள்.இந்த நிகழ்வின் ஒரு பகுதியாக, தேசிய R&D நிறுவனங்கள், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைப்புகள், சமூக அமைப்புகள் மற்றும் பள்ளி குழுக்களின் தலைவர்கள் கலந்து கொண்டு, இந்த புதிய கல்வி மாதிரியின் பார்வைகள் மற்றும் செயல்பாட்டு அனுபவங்களை பல்வேறு அமர்வுகளில் பகிர்ந்து கொண்டனர்.ஏ எஸ் வி ஏ.அமைப்பு, கல்வி நிறுவனங்களுக்கு NEP 2020-ன் கோட்பாடுகளை நடைமுறைப்படுத்த உதவுவதோடு, அவற்றை எதிர்காலத்திற்கு தயாரான கற்றல் முறைகள் நோக்கி வழிநடத்துகிறது.
இந்த முயற்சியின் ஆரம்ப கட்டங்களில், தேசிய கல்விக் கொள்கை வடிவமைப்புக் குழுத் தலைவர் டாக்டர் கே. கஸ்தூரிரங்கன் அவர்களின் செயல்வீரியமான வழிகாட்டுதல், AŚVA-வின் திசையையும் நோக்கத்தையும் மேலும் வலுப்படுத்தியுள்ளது. இதன் காரணமாக AŚVA அமைப்பு “NEP Alliance for Excellence” என்றும் அழைக்கப்படுகிறது.AŚVA-வின் இறுதி நோக்கம், மாணவர்களில் ஆர்வம், திறன் மற்றும் தன்னம்பிக்கையை வளர்த்து, இந்திய பள்ளி கல்வியை உலகத் தரத்திற்கு உயர்த்துவதாகும். இதில் தென்னகத்தைச் சேர்ந்த பள்ளி முதல்வர்கள் பலர் மற்றும் லாரன்ஸ் பள்ளியின் மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.








