மணிப்பூரில் தொடரும் அவல நிலை… இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்து உயிருடன் எரித்துக் கொலை..

ணிப்பூர் மாநிலத்தில் மைதேயி சமூகத்தினருக்கும், குகி பழங்குடியினருக்கும் இடையிலான வன்முறை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

அங்கு பெண்களுக்கு எதிரான கொடுமைகள் நடந்து வருவது இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. அங்கு அமைந்துள்ள மலைப் பகுதி மாவட்டமான ஜிரிபாமில் குகி – ஸோ பழங்குடியினர் வசிக்கும் ஜைரான் ஹமர் கிராமத்துக்குள் நவம்பர் 7ம் தேதி ஆயுதங்களுடன் புகுந்த தீவிரவாதிகள், அங்குள்ள வீடுகளுக்கு தீவைத்தனர். அதே நேரத்தில் பழங்குடியினப் பெண் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.

அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதனைத் தொடர்ந்து, அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக காவல்துறையினர் அனுப்பி வைத்துள்ளனர். மேலும், இந்த அறிக்கை வெளியானவுடன்தான், உண்மை தெரிய வரும் எனக் கூறுகின்றனர். இதுகுறித்து, அவரது கணவரிடம் மேற்கொண்ட விசாரணையில் “ இளம் பெண்ணின் காலில் தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர். இதனைத் தொடர்ந்து, அவர்கள் நான் உள்பட என் குழந்தைகள், என் பெற்றோரையும் என் மனைவியைத் தனியாக விட்டுவிட்டு வெளியேற வேண்டும் என வற்புறுத்தினர்” எனக் கூறியுள்ளார். பெண்ணின் மீதான பாலியல் வன்கொடுமை, வீட்டை எரித்தல், இனரீதியிலான துன்புறுத்தல் முதலான பிரிவுகளில் அந்தப் பெண்ணின் கணவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.