அமைச்சர் செந்தில்பாலாஜி வழக்கு … சமுதாயத்துக்கு என்ன சொல்ல வரீங்க..? நீதிபதி கிடுக்கிப்பிடி கேள்வி..?

ட்டவிரோத பண பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி தனக்கு ஜாமீன் வழங்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் இரண்டாவது முறையாக மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு சென்னை உயர் நீதிமன்ற சிறப்பு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அமர்வின் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. இப்போது செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஆர்யமா சுந்தரம் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமார் தலைமறைவாக இருப்பதை காரணம் காட்டி சாமி மறுக்க முடியாது என கருத்து தெரிவித்துள்ளது என வாதத்தை முன் வைத்தார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் “230 நாட்களாக என் மனதில் ஓடிக் கொண்டிருக்கும் ஒரு விஷயம், இலாகா இல்லாத அமைச்சராக எவ்வாறு செயல்பட முடியும்.

நான் அரசியல் குறித்து பேச விரும்பவில்லை. ஆனால் சாதாரண கடைநிலை ஊழியர்கள் 48 மணி நேரம் சிறையில் அடைக்கப்பட்டால் சஸ்பெண்ட் செய்யப்படுகிறார்கள். ஆனால் அமைச்சராக இவர் தொடருகிறார். இதன் மூலம் சமுதாயத்திற்கு என்ன வருகிறீர்கள்? என கேள்வி எழுப்பியதற்கு மனிதாபிமான அடிப்படையில் ஜாமீன் கேட்பதாக செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர் கோரிக்கை வைத்தார். அதனை பதிவு செய்து கொண்ட சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இதுகுறித்து துறை பதில் மனு தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டு பிப்ரவரி 14-ம் தேதிக்கு வழக்கினை ஒத்தி வைத்தார்.