பொது இடத்தில் தகாத வார்த்தை பேசி மீண்டும் சர்ச்சையில் சிக்கிய அமைச்சர் பொன்முடி..!!

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அடுத்த சிதலிங்கமடம் கிராமத்தில் கிராம எல்லை பிரித்து எடப்பாளையம் தனி ஊராட்சி வருவாய் சேர்த்து வருகிறது.

இதையடுத்து சித்தலிங்கமடம் பகுதியில் மக்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் அந்த இடத்திற்கு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி நேரில் சென்று பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது அமைச்சருக்கும், கிராம மக்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், அங்கிருந்த ஒருவரை பார்த்து அமைச்சர் தகாத வார்த்தைகளில் திட்டினார். அந்த வீடியொ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஏற்கனவே பெண்களை ஓசி பேருந்தில் செல்பவர்கள் என பொன்முடி பேசி சர்ச்சையாகி இருந்த நிலையில், தற்போது அவர் மீண்டும் இவ்வாறு மற்றொரு சர்ச்சையில் சிக்கியுள்ளது மக்களிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.