கோவை, இராமநாதபுரம் பகுதியில் அமைந்துள்ள மாநகராட்சி ஆரம்பப் பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று காலை திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
முதலமைச்சர் காலை உணவு திட்டப் பயனாளிகளான மாணவர்களுடன் உணவு தரம் எவ்வாறு உள்ளது என்றும், உணவு குறித்து பள்ளி மாணவர்களிடம் கேட்டறிந்தார்.
மேலும் பள்ளியில் உணவு தயாரிக்கும் ஊழியர்களிடம் உணவு குறித்தும் உணவுப் பொருள்கள் குறித்தும் கேட்டறிந்தார். அதனைத்தொடர்ந்து பள்ளி வகுப்பறை சென்று ஆசிரியர்களிடம் கலந்துரையாடினார்.
பின்னர் பள்ளி வளாகம் மற்றும் கழிவறைகளை ஆய்வு செய்து அங்கு பணிபுரியும் தூய்மை பணியாளர்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார்.