கோவை ரத்தினபுரி,குமாரசாமி நகரை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மகன் மணிகண்டன் ( வயது 23 )கடந்த 4 ஆண்டுகளாக தனியார் மினி பஸ் சில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று கரும்புக்கடை பஸ் ஸ்டாப்பகுதியில் மினி பஸ் ஓட்டி வந்தார் . அப்போது ஆட்கள் ஏற்றுவதில் ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக, இவரை 4 மினி பஸ் டிரைவர்கள் சேர்ந்து தகாத வார்த்தைகளால் பேசி தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் இவர் காயம் அடைந்தார்.. இதுகுறித்து மணிகண்டன் கரும்புக்கடை போலீசில் புகார் செய்தார். சப் இன்ஸ்பெக்டர் ஜோசப் குனியமுத்தூர் கங்கா நகர் 4 1வது வீதியைச் சேர்ந்த முஸ்தாக் அகமத் (வயது 25) கரும்புக்கடை சாரமேடு, மதினா நகர் முகமத் அஸ்பர் (வயது 23) உட்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
மினி பஸ் டிரைவர்கள் மோதல் – 4 பேர் மீது வழக்குபதிவு..!
