உத்திர பிரதேசத்தில், பகுஜன் சமாஜ்வாடி கட்சி ஆட்சியில் இருந்த போது, அப்போதைய முதலமைச்சராக மாயாவதி இருந்த சமயத்தில் அமைச்சரைவையில் இருந்தவர் ஹாஜி யாஹூப் குரோஷி. இவருக்கு சொந்தமான இறைச்சி தொழிற்சாலை உத்திரபிரதேசத்தில் இருக்கிறது. அங்கு சட்டத்திற்கு புறம்பாக சொத்துக்கள் விவரங்கள் இருப்பதாக தகவல் கிடைத்து அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதில், சுமார் 100 கோடி மதிப்பிலான சொத்துக்கள் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும், அந்த தொழிற்சாலையில் சட்டத்திற்கு புறம்பான 5 கோடி மதிப்பிலான இறைச்சி இருந்ததும் கண்டறியப்பட்டுள்ளது. இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஹாஜி யாஹூப் குரோஷி மீதும், அவரது நெருங்கிய உறவினர்கள் உட்பட 17 பேரின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.