சென்னையில் நடைபெற்ற திருமண விழாவில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய்யும், ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியும் சந்தித்துக் கொண்ட நிகழ்வு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஜெகன் மோகன் ரெட்டியின் உறவினரான சாஹில் மற்றும் வேதிகா ஆகியோரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் இந்த சந்திப்பு நிகழ்ந்தது. அரசியலுக்கு வந்த பிறகு கட்சி பணிகளில் தீவிரமாக இருக்கும் விஜய், இந்த விழாவில் ஜெகனை சந்தித்து நீண்ட நேரம் கைகுலுக்கி அன்பை பரிமாறிக்கொண்டார். இந்த சந்திப்பின் போது இருவரும் பரஸ்பரம் நலம் விசாரித்துக் கொண்டார்களே தவிர, அரசியல் ரீதியான ஆலோசனைகள் எதுவும் நடைபெறவில்லை என தெரிகிறது. அதே விழாவில் நடிகர் சூர்யா, ஜெகனை ஆரத்தழுவி வரவேற்றார். மேலும் கமல்ஹாசன், கார்த்தி, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் மற்றும் திரைத்துறை பிரபலங்களும் இதில் பங்கேற்றனர். இரு மாநிலங்களின் செல்வாக்குமிக்க தலைவர்கள் ஒரே மேடையில் சந்திப்பு’ வைரலாகி வருகிறது.
ஒரே மேடையில் மாஸ் அரசியல் லீடர்கள்.!!









