கோவை மே 21 சிவகங்கை மாவட்டம், மானாமதுரைபகுதியை காளீஸ்வரன் ( வயது 48)இவர் கோவை பீளமெடு தொட்டிபாளையம் பகுதியில் உள்ள லாரி டிரான்ஸ்போர்ட் அலுவலகத்தில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.நேற்று அதி காலையில் தொட்டிப்பாளையத்தில் உள்ள லாரி டிரான்ஸ்போர்ட் அலுவலகம் முன் டிப்பர் லாரியை நிறுத்திவிட்டுவீட்டுக்கு சென்று விட்டார்.. அதை யாரோ திருடி சென்று விட்டனர். இது குறித்து பீளமேடுபோலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து திண்டுக்கல் மாவட்டம் அணுமந்தம் நகர் விக்னேஸ்வரன் ( வயது 34) என்பவரை கைது செய்தனர். டிப்பர் லாரி மீட்கப்பட்டது.
டிரான்ஸ்போர்ட் அலுவலகத்தில் லாரி திருடியவர் கைது
