காங்கிரஸ் விரும்பினால் 2024ல் இணைந்து தேர்தலை சந்திக்கலாம்- மம்தா பானர்ஜி அழைப்பு..!

உத்தரப் பிரதேசம், பஞ்சாப், கோவா, உத்தரகண்ட் மற்றும் மணிப்பூர் ஆகிய 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகி உள்ளது.

உத்தரப் பிரதேசம், கோவா, உத்தரகண்ட் மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் பாஜாக வெற்றி பெற்று ஆட்சி அமைக்க உள்ளது. இந்த தேர்தலுக்கு முன்பு 3 மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சி இருந்த நிலையில், தற்போது அந்த எண்ணிக்கை 2 ஆக குறைந்துள்ளது.

ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் மட்டுமே காங்கிரஸ் ஆட்சி உள்ளது. இந்நிலையில், 5 மாநில தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி அளித்த பேட்டியில், காங்கிரஸ் விரும்பினால் 2024-ல் பாஜகவுக்கு எதிராக அனைவரும் ஓரணியில் இணையலாம். 5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் 2024-ல் எதிரொலிக்கும் என்பது சாத்தியமில்லை. இப்போதைக்கு சோர்வடைய வேண்டாம். நேர்மறையாக சிந்தியுங்கள் என தெரிவித்துள்ளார்.

EVM-ல் கொள்ளை மற்றும் முறைகேடுகள் நடந்துள்ளன. சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் சோர்ந்துவிடாமல் அதே EVM இயந்திரங்களின் தடயவியல் சோதனைகளை நாட வேண்டும். அகிலேஷ் யாதவின் வாக்கு சதவீதம் இந்த முறை 20% லிருந்து 37% ஆக அதிகரித்துள்ளது என மம்தா பானர்ஜி தெரிவித்தார்.