கோவை : கேரள மாநிலம் பாலக்காடு பக்கம் உள்ள பள்ளிபுரம், கள்ளிக்காடு பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் .இவரது மகன் ரினில் குமார் ( வயது 35) இவர் கோவை பெரிய கடை வீதி பகுதியில் உள்ள நகைப் பட்டறையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். அந்த பகுதியில் அறை எடுத்து தங்கி இருந்தார். இவர் பெங்களூரை சேர்ந்த திவ்யா என்ற பெண்ணை காதலித்து வந்தார்.. கடந்த ஒரு வாரமாக காதலி திவ்யா அவருடன் பேசுவதில்லை இதனால் ரினில்குமார் மன அழுத்தத்துடன் காணப்பட்டார் . இந்த நிலையில் தனது அறையில் யாரும் இல்லாத நேரம் தனது கையையும் கழுத்தையும் பிளேடால் அறுத்துக் கொண்டார்.பின்னர் விஷமும் குடித்தார். அவரை சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு குணமடைந்து சொந்த ஊரான பாலக்காட்டுக்கு சென்றார். அவருக்கு அங்கு மீண்டும் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. சிகிச்சைக்காக பாலக்காடு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். அங்கு சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் இறந்தார் . இது குறித்து பெரிய கடை வீதி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..
காதலி பேசாததால்.. பிளேடால் கழுத்தை அறுத்தும்,விஷம் குடித்தும் காதலன் தற்கொலை..









