குண்டுவெடிப்பு சம்பவங்களுக்குப் பிறகு குடிமக்களுக்கு செய்தியை சமரசங்களின்றி எவ்வாறு கொண்டு சேர்க்க வேண்டும் என்பதற்கு கர்நாடக டிஜிபி செயல் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
மங்களூருவில் இன்று அதிகாலை ஆட்டோவில் ஏற்பட்ட தீவிபத்தில் இரண்டு பேர் படுகாயம் அடைந்தனர். இதனையடுத்து நடைபெற்ற விசாரணையில் ஆட்டோ விபத்து திட்டமிடப்பட்ட தீவிரவாத தாக்குதல் என உறுதிப்படுத்தப்பட்டது. இதனை கர்நாடக டிஜிபி பிரவீன் சூட் தனது ட்விட்டரில் உறுதிப்படுத்தினார்.
இது குறித்து ட்விட்டரில் பதிவிட்ட அண்ணாமலை, குண்டு வெடிப்பு சம்பவங்களை கையாள்வதற்கு இது ஒரு சிறந்த உதாரணம் என தெரிவித்தார்.
இதனையடுத்து, ISIS தீவிரவாதிகளால் நிகழ்த்தப்பட்ட கோவை தற்கொலை படை தாக்குதல் குண்டு வெடிப்பு சம்பவத்தை எப்படி கையாளக்கூடாது என்பதற்கு திமுக அரசின் செயல்பாடுகள் எடுத்துக்காட்டாக விளங்கியதாகவும் தெரிவித்தார்.
Leave a Reply