LGM இசை வெளியீட்டு விழா… சென்னை வந்த தோனி – ரசிகர்கள் உற்சாக வரவேற்பு..!!

LGM இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்க சென்னை வந்த தோனிக்கு விமான நிலையத்தில் ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனைத் தொடர்ந்து டிரைலரை வெளியிட்டு தோனி வெளியிட்டார்.

இதன் பின்ன பேசிய அவர் தெரிவித்ததாவது..

‘ கடந்த 2005ஆம் ஆண்டு சென்னையில் தான் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடினேன். அதேபோல் டெஸ்ட் போட்டியில் அதிகபட்ச ஸ்கோரான 224 ரன்களை இங்கு தான் எடுத்தேன். தற்போது என் முதல் படமும் தமிழில்தான். ஐபிஎல் தொடங்கிய பிறகு தமிழ்நாட்டு மக்களால் தத்தெடுக்கப்பட்டேன் என்று தான் கூற வேண்டும். இந்த படம் நன்றாக வந்துள்ளது. அனைவரும் ரசிப்பீர்கள் என நம்புகிறேன்’ என தோனி தெரிவித்தார்.