ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க் கப்பலின் சிறப்பு அம்சங்கள் பற்றி இங்கே பார்ப்போமா..!!

கொச்சி கப்பல் கட்டும் தளத்தில், அதிநவீன தானியங்கி அமசங்களைக் கொண்ட இந்தக் கப்பலை துவக்கி வைத்தார்.

இத்துடன், காலணி ஆதிக்கத்தின்போது, இந்திய கடற்படைக்காக உருவாக்கப்பட்டு இருந்த கொடியை ஒழித்து, புதிய வடிவத்தில் புதிய கொடியை அறிமுகம் செய்கிறார். விக்ராந்த் என்றால் வெற்றி மற்றும் வீரம். 2005 ஆம் ஆண்டு, இந்தக் கப்பலை கட்டுவதற்காக ஸ்டீல் கட் செய்யப்பட்டு, பணிகள் துவக்கி வைக்கப்பட்டது.

‘விக்ராந்த்’ கட்டுமானத்திற்காக, அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷ்யா, சீனா மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகளுடன் இந்தியா இணைந்தது. உள்நாட்டில் விமானம் தாங்கி கப்பலை வடிவமைத்து உருவாக்குவதற்கான முக்கிய திறனை இந்தியா கொண்டுள்ளது என்பது நிரூபணமாகியுள்ளது.

இந்தியாவின் முக்கிய தொழில்துறை நிறுவனங்கள் மற்றும் 100க்கும் மேற்பட்ட சிறுகுறு நிறுவனங்கள் வழங்கிய உள்நாட்டு உபகரணங்கள் மற்றும் இயந்திரங்களைப் பயன்படுத்தி இந்த போர்க்கப்பல் கட்டப்பட்டுள்ளது.

 

விக்ராந்த் இயக்கப்படுவதன் மூலம், இந்தியாவில் இரண்டு விமானம் தாங்கி கப்பல்கள் செயல்பாட்டில் இருக்கும், இது நாட்டின் கடல் பாதுகாப்பை மேம்படுத்தும்.

போர்க் கப்பல் வடிவமைப்பு அமைப்பு, இந்திய கடற்படையின் உள் நிறுவனம் மற்றும் கொச்சின் ஷிப்யார்டு லிமிடெட் என்ற பொதுத்துறை நிறுவனத்தால் கட்டமைக்கப்பட்டது. இதற்கு முந்தைய கப்பல், 1971 ஆம் ஆண்டு பாகிஸ்தானுடனான போரில் முக்கிய பங்கு வகித்தது.

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஆய்வகம் (டிஆர்டிஎல்) மற்றும் இந்திய கடற்படையுடன் இணைந்து ஸ்டீல் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா லிமிடெட் (எஸ்ஏஐஎல்) மூலம் ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பல் கட்டுமானத்திற்கு தேவையான ஸ்டீல் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டது.

கப்பல் கட்டுமானத்தின் முதல் கட்டப் பணிகள் 2013 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் வெற்றிகரமாக முடிந்தது.

புதிய ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க்கப்பல், 262 மீட்டர் நீளம், 59 மீட்டர் உயரம், 62 மீட்டர் அகலம் கொண்டது. இதன் மொத்த எடை 40 ஆயிரம் டன்கள். கப்பலின் அதிகபட்ச வேகம் 28 நாட்ஸ் (கடல் மைல்கள்). இந்தக் கப்பலில் மொத்தம் 14 அடுக்குகள் கொண்ட 2,300 அறைகள் உள்ளன.

இது சுமார் 2,200 பெட்டிகளைக் கொண்டுள்ளது, சுமார் 1,600 பணியாளர்கள் தங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் பெண்கள் அதிகாரிகள் மற்றும் மாலுமிகள் தங்குவதற்கு சிறப்பு அறைகள் உள்ளன.

பிசியோதெரபி கிளினிக், ஐசியூ, ஆய்வகங்கள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட வார்டு உள்ளிட்ட சமீபத்திய உபகரணங்களுடன் கூடிய முழு அளவிலான மருத்துவ வளாகத்தையும் கப்பல் கொண்டுள்ளது.

இது உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட மேம்பட்ட இலகுரக ஹெலிகாப்டர்கள், இலகுரக போர் விமானங்கள், தவிர MiG-29K போர் விமானங்கள், Kamov-31 மற்றும் MH-60R மல்டி-ரோல் ஹெலிகாப்டர்களை உள்ளடக்கிய 30 விமானங்களைக் கொண்ட விமானப் பிரிவை இயக்கும் திறன் கொண்டதாக இருக்கும்.