கோவை திரிபுரசுந்தரி அம்மன் திருக்கோவில் கும்பாபிஷேக விழா.!!

கோவை மாவட்டம் உடையாம்பாளையத்தில் அருள்மிகு .திரிபுரசுந்தரி அம்மன் தொட்டிச்சி அம்மன் திருக்கோவில் உள்ளது. இக்கோவில் மகா கும்பாபிஷேகம் கோவை காமாட்சிபுரி ஆதீனம் குருமகா சன்னிதானம் ஞானகுரு சாக்த ஸ்ரீ சிவலிங்கேஸ்வர சுவாமிகள் திருக்கரங்களால் நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தார்கள். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் கோவை காமாட்சிபுரி ஆதீனம் அருள் உரையாற்றினார். சிறப்பு பூஜைகள்,10 வித தரிசனம் கோமாதா பூஜை நடந்தது.