வீட்டிலிருந்த நகை – பணம் திருட்டு. வேலைக்கார பெண் கைது.

கோவை செல்வபுரம் இந்திரா நகர் ,அருள் கார்டனை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார் ( வயது 40 )கடந்த ஆண்டு இவரது வீட்டிலிருந்த 6 கிராம் தங்க கை செயின், 96 கிராம் வெள்ளி கொலுசு, ஒரு செல்போன் ,ஸ்மார்ட் டிவி , பணம் ரூ 10 ஆயிரம் ஆகியவை திருட்டு போனது. இது குறித்து கிருஷ்ணகுமார் செல்வபுரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில் அவரது வீட்டில் வேலை செய்து வந்த செல்வபுரம் வடக்கு அவுசிங் யூனிட்டை சேர்ந்த விக்னேஷ் மனைவி புவனேஸ்வரி (வயது 24 )என்பவர் தான் இந்ததிருட்டை நடத்தியது தெரிய வந்தது .இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.திருடப்பட்ட பொருட்கள் மீட்கப்பட்டது .மேலும் விசாரணை நடந்து வருகிறது.