2 வீடுகளில் பூட்டை உடைத்து நகை – பணம் திருட்டு.

கோவை மே 6 கோவை துடியலூர் பக்கம் உள்ள தொப்பம்பட்டி, ராஜ ராஜேஷ்வர் நகரை சேர்ந்தவர் நடராஜன் ( வயது 48) இவர் வீட்டை பூட்டி விட்டுகுடும்பத்துடன் சொந்த ஊரான சேலம் மாவட்டம் கம்மாளபட்டிக்கு சென்றிருந்தார் நேற்று திரும்பி வந்தார். அப்போது வீட்டின் முன் கதவு பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது .உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் பீரோவில் இருந்த 5 பவுன் தங்க நகைகளை காணவில்லை. யாரோ திருடி சென்று விட்டனர். இது குறித்து நடராஜன் துடியலூர் போலீஸ் புகார் செய்துள்ளார் இதேபோல சிங்காநல்லூர் எஸ்.ஐ. எச். . காலனி கங்கா நகரை சேர்ந்தவர்பொன்ராஜ் இவரது மகன் புவனேஷ் ( வயது 31 )இவர் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் திருச்செந்தூர் கோவிலுக்கு சாமி கும்பிட சென்றிருந்தார்.நேற்று வந்து பார்த்தபோது வீட்டில் பீரோவில் இருந்த 5 பவுன் தங்க நகைகள் பணம் ரூ 17 ஆயிரம் மற்றும் வெள்ளிப் பொருட்களை காணவில்லை. யாரோ திருடி சென்று விட்டனர். இது குறித்து புவனேஷ் சிங்கநல்லூர் போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.