ரயில் நிலையத்தில் இரும்பு கம்பி திருட்டு..!

மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படை ( ஆர்.பி.எப்) அதிகாரிகள் நேற்று இரவு ரோந்து சுற்றி வந்தனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து சோதனை செய்தனர் . அவரிடம் ரயில் தண்டவாளத்தில் பொருத்தக்கூடிய 10 இரும்பு கம்பிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டார். விசாரணையில் அவர் பள்ளேபாளையம், தேவாங்கபுதூர் பழனிச்சாமி ஆறுமுகம் (வயது 43) என்பது தெரிய வந்தது. அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்..