ஈரான் மீதான போர் விரைவில் முடிவுக்கு வரும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கூறிய கருத்திற்கு, ஈரானின் புரட்சிகர காவல்படை கடும் பதிலடி கொடுத்துள்ளது.
இந்தப் போரை எப்போது முடிக்க வேண்டும் என்பதை நாங்கள்தான் தீர்மானிப்போம்; வெள்ளை மாளிகை அல்ல” என்று ஈரான் தெரிவித்துள்ளது. பிராந்தியத்தின் எதிர்காலமும் அதிகார சமன்பாடுகளும் தற்போது தங்கள் கைகளிலேயே இருப்பதாக ஈரான் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.முன்னதாக, புளோரிடாவில் பேசிய ட்ரம்ப், ஈரானுடனான மோதல் ஒரு குறுகிய கால பயணமாக இருக்கும் என குறிப்பிட்டிருந்தார். ஆனால், ஹார்முஸ் ஜலசந்தியில் எண்ணெய் போக்குவரத்திற்கு ஈரான் ஏதேனும் இடையூறு விளைவித்தால், இதுவரை இல்லாத அளவிற்கு 20 மடங்கு கடுமையான தாக்குதலை அமெரிக்கா தொடுக்கும் என எச்சரித்துள்ளார்.
ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரான் தாக்குதல் செய்தால் ஈரானுக்கு மரண் அடி நிகழும் என்றும், அந்த நாடு மீண்டும் மீண்டு வர முடியாதபடி அதன் இலக்குகள் அழிக்கப்படும் என்றும் ட்ரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.







