உலக அளவில் முதன் முறையாக சூப்பர் ஸ்மார்ட் பேக்ஹோ லோடர் அறிமுகம்

உலக அளவில் முதன் முறையாக சூப்பர் ஸ்மார்ட் பேக்ஹோ லோடர் அறிமுகம்

நிலங்களை சரி செய்ய, குழி தோண்ட, மண் எடுக்க உள்ளிட்ட பணிகளுக்கு பணி ஆட்கள் பற்றாக்குறை தலைவிரித்து ஆடுகின்றன. மெசின்களை வைத்து பணிகளை செய்தாலும் எரிபொருள் விலை விண்ணை தொட்டதனால் மெசின்களை பயன்படுத்தவும் பொதுமக்கள் நெருக்கடியில் தயங்கி வருகின்றனர். இந்த நிலையில் குறைந்த எரிபொருளில் அதிக பயன்பாடுகளை கொண்ட மெசின் அறிமுக செய்யப்படு உள்ளது. கோவை தொழில் நிறுவனங்களில் டிராக்டர் தயாரிக்கும் நிறுவனமான “புல் மெசின்ஸ் பிரைவேட் லிமிடெட்” நிறுவனம் BACKHOE LOADERS – களை (பின்புறம் தோண்டி முன்புறம் பாரம் சுமப்பது) உற்பத்தி செய்து வருகின்றது. இந்த நிலையில் தரமான நீடித்து உழைக்கும் வல்லமை பொருந்திய தயாரிப்புகளை தந்துவரும் புல் நிறுவனம் மேம்படுத்தப்பட்ட ”சூப்பர் ஸ்மார்ட்” (SUPER SMART) மாடலை அறிமுகப்படுத்தி இருக்கின்றனர். 75 HP கிர்லோஸ்கர் இன்ஜின் பொருத்தப்பட்டு இருக்கின்றது. இதில் பொருத்தப்பட்டு இருக்கும் பிஸ்டன் பம்ப் தேவையான அளவு சக்தியை மட்டுமே உபயோகித்து இயங்கும் வண்ணம் மின்னணு முறையில் (ELECTRIC SYSTEM) வடிவமைக்கப்பட்டு உள்ளது. இந்த நவீன தொழில் நுட்பத்தினால் இயந்தியரம் இயங்க தேவையான எரிபொருள் கட்டுப்படுத்தப்பட்டு எரி சக்தி விரையம் தடுக்கப்படுகின்றன. இதனால் பெருமளவில் பெட்ரோல் டீசல் உள்ளிட்ட எரிபொருட்கள் சேமிக்க முடியும். நவீன தொழில் நுட்பத்தினை உள்ளடக்கி தயாரிக்கப்பட்ட கிரிஸ் லாக்கர் இன்ஜின், மாறுபட்ட கோணங்களில் இயங்க கூடிய ஸ்டேரிங், 40 கிலோ மீட்டர் வேகம் வரை இயங்கும் விதாமாக வடிவமைப்பு, ஒத்திசையில் இயங்கும் கியர்பாக்ஸ், குளிர்சாதன வசதியுடன் கூடிய ஓட்டுநர் கூண்டு , வேலைக்கும் தேவைக்கும் ஏற்றவாறு பக்கெட்டுகளை மாற்றி இணைக்கும் வசதி, அதிக வலுவையும் அழுத்ததினையும் தாங்கும் விதமான வடிவமைப்பு உள்ளிட்ட சிறப்பு அம்சங்களுன் உற்பத்தி செய்யப்பட்டு உள்ளது.

250 பொறியியல் வல்லுநர்கள் , 1000 கைதேர்ந்த தொழிலாளர்களின் கடின உழைப்பால் உதயமாகும் தயாரிப்புகள் இந்தியா முழுவதும் 76 விற்பனை கூடங்களில் விறக்கப்பட்டு வருகின்றன. உள்நாட்டில் பலராலும் ஈர்க்கப்பட்ட நிறுவனத்தின் உற்பத்திகள் வெளிநாடு வாடிக்கையாளர்களாலும் ஈர்க்கப்பட்டு 55 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.