முதல்வரின் காரில் அதிரடி சோதனை

புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி திருச்செந்தூர் நோக்கி பயணம் மேற்கொண்டிருந்தபோது, தேர்தல் பறக்கும் படையினரால் வாகன சோதனை செய்யப்பட்ட சம்பவம் திருச்சுழி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டதையடுத்து, தமிழகம் முழுவதும் தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. இதன் காரணமாக, விருதுநகர் மாவட்டம் திருச்சுழி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு மற்றும் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், மதுரை – தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் காரியாபட்டி அருகே உள்ள ஆவியூர் சோதனைச்சாவடியில் அதிகாரிகள் வழக்கம்போல் வாகனங்களை நிறுத்தி சோதனை செய்து கொண்டிருந்தனர். அப்போது மதுரையிலிருந்து திருச்செந்தூர் நோக்கி சென்று கொண்டிருந்த புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியின் கார் அங்கு வந்தது. தேர்தல் விதிமுறைகள் அமலில் இருப்பதால், அதிகாரிகள் அவரது வாகனத்தையும் நிறுத்தி சோதனை செய்ய முயன்றனர்.