கோவையில் கேஸ் சிலிண்டர் கசிவால் தீ விபத்து..!

கோவை அண்ணா சிலை கவுசி பவன் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பையன். இவரது மனைவி இன்று வீட்டில் கேஸ் சிலிண்டர் அடுப்பில் சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென சிலிண்டரில் இருந்து கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் அலறி சத்தம் போட்டார். அவரின் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். பின்னர் இது குறித்து அவர்கள் தெற்கு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து நிலைய அலுவலர் சிவராஜ் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அவர்கள் அங்கு எரிந்து கொண்டிருந்த தீயை தண்ணீர் ஊற்றி அணைத்தனர். தகவல் அறிந்து போலீசாரும் சம்பவ இடத்துக்கு வந்தனர். போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். கேஸ் சிலிண்டர் கசிவாள் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரப்பரப்பை ஏற்படுத்தியது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.