மதுரையில் வீடு வீடாக சென்று சட்ட விரோதமாக வளர்க்கப்பட்ட பச்சை கிளிகள் பறிமுதல் – வனத்துறையினர் அதிரடி..!

துரை: வீடுகளில் சட்ட விரோதமாக வளர்க்கப்பட்ட கிளிகளை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். வீடுகளில் கிளிகள் வளர்க்க தடை இருப்பதால் தற்போது மதுரை மாவட்ட வனத்துறை காவல் துறையினர் ஒவ்வொரு வீடாக சென்று அங்கே வளர்க்க கூடிய பச்சை கிளிகளை பறிமுதல் செய்து.

கிளிகள் வளர்த்தால் ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என்ற எச்சரிக்கையை கொடுத்து வருகின்றனர்.

தமிழ்நாடு வனவிலங்குகள் பாதுகாப்பு திருத்த சட்டத்தின்படி கிளிகள் என்பது பாதுகாக்கப்பட பறவைகளாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக கிளிகளை வீடுகளில் வளர்ப்பது மற்றும் விற்பது தண்டனை கூறிய குற்றமாகும். இந்நிலையில் தான் மதுரை மாநகர பகுதியில் இருக்க கூடிய நரிமேடு, மருதுபாண்டியநகர், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வீடுகளில் 100க்கும் மேற்பட்ட கிளைகள் வளர்க்கப்படுவதாக வனத்துறை காவல்துறைக்கு தொடர்ந்து புகார்கள் வந்தது.

இந்த புகாரின் அடிப்படையில் தற்போது நரிமேடு பகுதியில் இருக்க கூடிய ஒவ்வொரு வீடு வீடாக சென்று வனத்துறையினர் பச்சை கிளிகள் கூண்டில் அடைக்கப்பட்டு வளர்க்கப்படுகிறதா என்பதை சோதனை செய்து அந்த கிளிகளை பறிமுதல் செய்தது. தொடர்ந்து கிளி வளர்ப்பு என்பது சட்டவிரோத செயல் அப்படி ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்கிற எச்சரிக்கையும் காவல்துறையினர் தெரிவித்து வருகின்றனர். ஜூலை 17ம் தேதிக்குள் கிளிகளை வனத்துறை அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என்கிற எச்சரிக்கையும் வனத்துறை காவல்துறையினர் கொடுத்துவருகின்றனர்..