ரூ.10 ஆயிரம் கொடுத்தால் ரூ.50 ஆயிரம்… நூதன பண மோசடியில் ஈடுபட்ட தில்லாங்கடி திமுக பிரமுகர்..!!

ன்னியாகுமரியில் 10 ஆயிரம் கொடுத்தால் 5 மடங்கு பணம் கொடுப்பதாக கூறி பணமோசடியில் ஈடுபட்ட திமுக பிரமுகர் உள்பட 11 பேர் கைது செய்யப்பட்டனர்.

குமரி மாவட்டம் குண்டல் பகுதியில் தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கியிருந்த 6 பேரைக் காண அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான நபர்கள் வந்து சென்றனர். இதனால், சந்தேகமடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில், மதுரை மாவட்டம் பேரையூரைச் சேர்ந்த திமுக பிரமுகர் சுந்தர பாண்டியன் மற்றும் அவருடன் தொடர்பில் இருந்த 35 பேரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

அதில், சுந்தரபாண்டியன் தன்னிடம் 10 ஆயிரம் கொடுத்தால், 3 மாதத்தில் 50 ஆயிரமாக பணம் கொடுப்பதாக புரோக்கர்கள் மூலம் தனியார் விடுதியின் அறைக்கு நபர்களை அழைத்து வந்தது தெரிய வந்தது.

இதையடுத்து, அவர்கள் தங்கியிருந்த அறைகளை சோதனை செய்ததில், 10க்கும் மேற்பட்ட செல்போன்கள், லேப்டாப் மற்றும் 3 கார்கள், 11 லட்சம் பணத்தையும் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.