அதேபோல் தமிழகத்தில் குறைத்தால் அதன் லாபம் இந்த மாநிலத்துக்கு கிடைக்கும்.சங்ககிரியில் உள்ள தனியார் சிமென்ட்ஸ் நிறுவனத்தினர், அதிக பாரத்தை ஏற்றிச்சென்று வருகின்றனர். இதுகுறித்து மத்திய அரசுக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்தியுள்ளோம். இந்நிறுவனம் அப்பகுதியில் உள்ள லாரி உரிமையாளர்களுக்கு பாரங்கள் ஏற்ற அனுமதி அளிக்காதது வருத்தம் அளிக்கிறது. அந்நிறுவனம் மீண்டும் இப்பகுதி லாரி உரிமையாளர்களுக்கு பாரம் ஏற்றிச்செல்ல அனுமதிக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.சங்க செயலர் மோகன் குமார், பொருளாளர் செங்கோட்டுவேல், துணைத்தலைவர் சின்னதம்பி, சேலம் மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்கத்தலைவர் தனராஜ், சங்ககிரி, திருச்செங்கோடு, பவானி, குமாரபாளையம், இடைப்பாடி லாரி உரிமையாளர் சங்க நிர்வாகிகள், ரிக் உரிமையாளர்கள் சங்கம், எர்த் மூவர்ஸ் சங்க நிர்வாகிகள் உள்பட பலர் பங்கேற்றனர்..
தமிழகத்தில் டீசல் விலையை குறைத்தால் ஓராண்டில் ரூ.4,000 கோடி லாபம் கிடைக்கும்’

சங்ககிரி: ‘கர்நாடகாவை போன்று தமிழகத்தில் டீசல் விலையை குறைத்தால், ஓராண்டில், 4,000 கோடி ரூபாய் லாபம் கிடைக்கும்,” என, தென்னிந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் கூட்டமைப்பின் பொதுச்செயலர் சண்முகப்பா பேசினார்.சேலம் மாவட்டம் சங்ககிரி லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில், 49வது மகாசபை கூட்டம் நேற்று நடந்தது.
தலைவர் கந்தசாமி தலைமை வகித்து, லாரி உரிமையாளர்கள் சங்க பெட்ரோல், டீசல் விற்பனை நிலையம், லாரிகளுக்கு உதிரிபாக விற்பனை நிலையங்களில், 2022 – 2023ம் ஆண்டில் டீசல், லாரிகளுக்கு உதிரிபாகங்கள் அதிகமாக வாங்கிய முதல், 10 பேருக்கும், சுற்றுலா வேன், ஆட்டோ உரிமையாளர்களுக்கும் பரிசுகளை வழங்கினார்.தொடர்ந்து தென்னிந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் கூட்டமைப்பின் பொதுச்செயலர் சண்முகப்பா பேசியதாவது:பா.ஜ., ஆளும் மாநிலங்களில் டீசல் விலைகளை குறைத்துள்ளனர். அதேபோல் மற்ற மாநிலங்களிலும் டீசல் விலையை அந்தந்த மாநில அரசுகள் குறைக்க வேண்டும். கர்நாடகாவில் டீசல் விலை குறைப்பால் தமிழக லாரி உரிமையாளர்கள், அங்கு டீசலை நிரப்புகின்றனர். இதன்மூலம் அந்த மாநிலத்துக்கு ஓராண்டில் குறைந்தபட்சம், 4,000 கோடி ரூபாய் லாபம் கிடைத்துள்ளது.