பந்த் என்ற பெயரில் மக்களை அச்சுறுத்தினால் கடும் நடவடிக்கை-கோவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி எச்சரிக்கை..!

கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் உள்ள கருத்தரங்கு கட்டிடத்தில் கோட்டைமேட்டில் காரில் சிலிண்டர் வெடித்து பலியான சம்பவம், கைது நடவடிக்கை, மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்துஅதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் இன்று நடந்தது.இதில் அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டு மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும், அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “கோவை கார் வெடிப்பு சம்பவம் நடந்து 12 மணி நேரத்தில் இயல்பு நிலை திரும்பியது. ஏதோ பதற்றம் நிலவியது போல சிலர் செய்தி வெளியிடுவது கண்டனத்திற்குரியது; சிலர் குறுகிய மனப்பான்மையுடன் கருத்து தெரிவிக்கின்றனர்.
– எதை தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலையில் பாஜக அரசியல் செய்கிறது;.எத்தனையோ இடங்களில் தீவிரவாத தாக்குதல்கள் நடந்தும் பிரதமரோ, பாஜக தலைவர்களோ வாய் திறந்துள்ளார்களா?தீவிரவாத தாக்குதல்கள் நடந்த போது எத்தனை முறை பிரதமர் அது குறித்து பேசியுள்ளார்;ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தளபதி உயிரிழந்தபோது எத்தனை பாஜக தலைவர்கள் அதுபற்றி பேசினார்கள்”கோவையில்
பந்த் என்ற பெயரில் மக்களை அச்சுறுத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் ..கோவையில் இந் சம்பவம் நடந்த அன்றே மக்கள் யாரும் பீதி அடையவில்லை. அன்றாட வாழ்க்கை நடந்தது
மக்கள் யாரும் அச்சப்படவில்லை; பதற்றப்படவில்லை; எப்போதும் கோவை இயல்பு நிலையில் உள்ளது
-தமிழ்நாட்டில் கட்சியை வளர்ப்பதற்காக பாஜக தரம் தாழ்ந்த அரசியலில் ஈடுபடக் கூடாது; மக்கள் நலத்திட்டங்களை மேற்கொள்வதன் மூலம்தான் கட்சியை வளர்க்க முடியும்.இவ்வாறு அவர் கூறினார்.