ஒடிஷா விபத்து அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன்- எடப்பாடி பழனிசாமி ட்வீட்.!!

டிசாவின் பாலசோர் மாவட்டத்தில் நேற்று (ஜூன் 2) மாலை பயங்கர ரயில் விபத்து ஏற்பட்டது. ஹவுரா செல்லும் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலின் பல பெட்டிகள் தடம் புரண்டு மற்றொரு ரயிலில் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்து மிகவும் பயங்கரமானது, இதுவரை 280 பேர் உயிரிழந்ததாகவும், 900 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சரக்கு ரயில், கோரமண்டல் எக்ஸ்பிரஸ் மற்றும் ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில்கள் மோதியதால் இந்த பெரும் விபத்து ஏற்பட்டது.

பாலசோரில் நடந்த இந்த சம்பவம் இந்தியா முழுவதும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்தநிலையில், ஒடிசா ரயில் விபத்து குறித்து கேட்டறிந்து மனவேதனை அடைந்ததாக எதிர்க்கட்சி தலைவரும், அதிமுகவின் பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “ஒடிஷாவின் பாலசோர் மாவட்டம் அருகே சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ், ஹவுரா ரெயில் மற்றும் சரக்கு ரயில் ஆகிய 3 ரயில்கள் ஒன்றின் மீது ஒன்று மோதிய ரயில் விபத்தில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என்ற செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன்.

அதிலும் தமிழ்நாட்டை சேர்ந்த பயணிகள் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கின்றனர் என்பதை அறிந்து சொல்லொன்னா துயறுற்றேன், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதுடன், விபத்தில் காயமுற்று சிகிச்சை பெற்று வருவோர் விரைவில் பூரண நலம் பெற்று வீடு திரும்ப அனைத்து முன்னெடுப்பையும் தமிழக அரசு துரிதமாக எடுக்க வலியுறுத்துகிறேன் , அது மட்டுமில்லாமல் தமிழக பயணிகளின் உற்றார் தொடர்பு கொள்ள தனி அவசர தொடர்புக்கான அனைத்து வசதிகளையும் ஏற்படுத்த வேண்டுமனவும்,இந்த கோர ரெயில் விபத்தில் இறந்த தமிழக பயணிகளுக்கு உரிய நிவாரண தொகையும் ,காயமுற்றோருக்கு நிதி உதவியும் உடனடியாக வழங்க வேண்டுமாய் வலியுறுத்துகிறேன்.” என பதிவிட்டுள்ளார்.