கணவன், மனைவி, மகன் 3 பேர் எங்கோ மாயம்..!

கோவை செல்வபுரம் வடக்கு ஹவுசிங் யூனிட்டை சேர்ந்தவர் ஷாஜகான் (வயது 46) இவர் கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்தார். இந்த நிலையில் கடந்த 24ஆம் தேதி தனது மனைவி நஜ்முனீஷா (வயது 40)மகன் நபி (வயது 11)ஆகியோருடன் எங்கோ மாயமாகிவிட்டார். இது குறித்து அவரது மகள் செல்வபுரம் போலீசில் புகார் செய்துள்ளார். இன்ஸ்பெக்டர் அழகுராஜ் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்..