கோவை கெம்பட்டி காலனி உப்பு மண்டி பகுதியை சேர்ந்தவர் கதிர்வேல் ( வயது 35) இவரது மனைவி பாக்கியலட்சுமி ( வயது 27) கதிர்வேல் குடிப்பழக்கம் உடையவர். நேற்று மது குடிக்க மனைவியிடம் பணம் கேட்டார் அதற்கு பாக்கியலட்சுமி இல்லை என்று மறுத்தார் .இதனால் ஆத்திரமடைந்த கதிர்வேல் மறைத்து வைத்திருந்த கத்தியால் மனைவியை குத்தினார். இதில் அவருக்கு பலத்தகாயம் ஏற்பட்டது. அவர் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இதுகுறித்து கடைவீதி காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. சப் இன்ஸ்பெக்டர் வசந்தகுமார் வழக்கு பதிவு செய்து கணவர் கதிர் வேலுவை நேற்று கைது செய்தார். இவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்..
குடிக்க பணம் கொடுக்க மறுத்ததால் மனைவியை கத்தியால் குத்திய கணவர்..!







