கோவை மாவட்டம் வால்பாறை சுற்று வட்டாரப் பகுதிகளில் யானை, சிறுத்தை,கரடி, காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள் அதிகளவில் நடமாடி வருகின்றன. இந்நிலையில் பல சமயங்களில் மக்கள் குடியிருப்பு பகுதிகளில் நுழைந்து பொருட்சேதம் மற்றும் உயிர் சேதங்களை ஏற்ப்படுத்தி வரும் நிலை தொடர்ந்து வருவதால் இதனை கருத்தில் கொண்டு மனித- வனவிலங்கு மோதலை கட்டுப்படுத்தவும் அதை தடுக்கவும் மாவட்ட நிர்வாகம் மற்றும் வனத்துறையினர் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அதில் ஒருபகுதியாக எஸ்டேட் பகுதிகளில் மக்கள் குடியிருப்பு பகுதிக்கு அருகில் உள்ள வாழை மரங்கள் மற்றும் புதர்கள் ஆகியவற்றை அகற்ற அனைத்து எஸ்டேட் நிர்வாகத்தினருக்கும் அதற்கான அறிக்கை வழங்கப்பட்டுள்ள நிலையில் அதைத் தொடர்ந்து தி பெரிய கராமலை குரூப்பில் இப் பணி தற்போது நடைபெற்று வருகிறது . இந்நிலையில் வால்பாறை அருகே உள்ள அக்காமலை எஸ்டேட் பகுதியில் குரூப் மேலாளர் அறிவுறுத்தலின் படி எஸ்டேட் மேலாளர் மகேந்திரன் நேரடி பார்வையில் நேற்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. மேலும் அப்பகுதியில் சுமார் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து வளர்க்கப்பட்டு வரும் வாழை மரங்கள் ஆயிரக்கணக்கில் இருப்பதால் காட்டுயானைகள் அவ்வப்போது வந்து வாழை மரங்களை தின்றுவிட்டு மக்களுக்கு எந்த தொந்தரவும் கொடுக்காமல் சென்றுவிடும் நிலை இருந்து வருவதாகவும் தற்போது வாழைமரங்களை அகற்றும் பணி நடைபெறுவதால் காட்டுயானைகள் உணவுக்காக வந்து குடியிருப்புக்களை சேதப்படுத்த வாய்ப்புள்ளதாகவும் எனவே சம்பந்தப்பட்ட வனத்துறையினர் அதற்கான துரித நடவடிக்கை மேற்க்கொள்ள வேண்டும் என்றும் அப்பகுதி பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்..
மனித – வனவிலங்கு மோதல் தடுப்பு – குடியிருப்புகளில் புதர்கள் அழிக்கும் பணி தீவிரம்..!








