ஒரு பேரல் கச்சா எண்ணெயிலிருந்து எத்தனை லிட்டர் பெட்ரோல்,டீசல் கிடைக்கும் – இவ்வளவு லாபமா..?

தற்பொழுது பெட்ரோல் டீசல் விலைகள் அதிகமாக இருப்பதன் காரணமாக வாகன ஓட்டிகள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளார்கள்.

மீண்டும் பழைய நிலைமைக்கு வந்து விடுமோ? என்ற எதிர்பார்ப்பும் அவர்களிடம் உள்ளது. வீட்டிற்கு வாகனங்களும் ஆட்களுக்கு இணையாக இருப்பதும் இதில் உள்ள முக்கிய விஷயம். ஒரு வீட்டிற்கு உருவாகும் என்று நிலை இப்போது ஒரு வீட்டிற்கு 5 வாகனங்கள் என்ற நிலைமைக்கு தள்ளப்பட்டு விட்டோம். பணம் இருக்கிறவர்கள் எப்படியாவது பெட்ரோலுக்கு டீசலுக்கு பணத்தைச் செலவழித்து விடுவார்கள் ஆனால் பணம் இல்லாத மிடில்கிளாஸ் மக்கள் இந்த பெட்ரோல் டீசல் விலை காரணமாக பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதன் காரணமாக மத்திய அரசையும், மாநில அரசையும் வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களில் பங்கு வகிக்கிறார்கள்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக கூறப்படுவது கச்சா எண்ணெய் விலைதான். கச்சா எண்ணெய்யில் இருந்து பெட்ரோல், டீசல் மட்டும் கிடைப்பது இல்லை. எனவே கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு கிடைக்கக்கூடிய அனைத்து பொருட்களுக்கும் பல்வேறு வேலைகள் நிர்ணயிக்கப்படுகின்றது. குறிப்பாக ஒரு பேரல் கச்சா எண்ணெய் என்பது சுமார் 159 மீட்டர் ஆகும். இந்த கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு மூலம் நமக்கு 72 லிட்டர் பெட்ரோல், 15 லிட்டர் விமான எரிபொருள், முப்பத்தி எட்டு லிட்டர் டீசல் 34 லிட்டர் தார் மற்றும் நாப்தா ஆகியவை கிடைக்கின்றன.

குறிப்பாக நம் மொத்தமாக கொள்முதல் செய்யும் ஒரு பேரல் கச்சா விலை சுமார் 103 டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் சுமார் ₹ 7828. பெட்ரோலை பொறுத்தவரை 3 ரகங்கள் உள்ளன. அவற்றில், நாம் பயன்படுத்தும், சாதாரண பெட்ரோல், ஸ்பீட் பெட்ரோல், ஆக்டேன் 97 என்று அழைக்கப்படும் சூப்பர் கார்களுக்கு பயன்படுத்தப்படும் பெட்ரோல். இதில் சாதாரண பெட்ரோலில் விலை 110 ரூபாய். ஸ்பீட் பெட்ரோலின் விலை 114 ரூபாய், ஆக்டேன் 97 ரக பெட்ரோலின் விலை 130 என்ற அளவில் உள்ளது. பெட்ரோல் விலை ஒரு லிட்டருக்கு பத்து பதினைந்து என்று வைத்துக்கொண்டால் எழுபத்தி இரண்டு லிட்டர் பெட்ரோல் மூலம் சுமார் ₹ 8,280 ரூபாய் லாபமா கிடைக்கும்.