பின்னர், வங்கி அதிகாரிகளின் வழிகாட்டுதலின் பேரில், மாநகர காவல் ஆணையர் நடத்தும் குறைதீர் நாள் கூட்டத்தில், காவல் ஆணையர் காமினியை நேரில் சந்தித்து, கலைவாணி புகார் கொடுத்துள்ளார்.இந்நிலையில், கலைவாணி கொடுத்துள்ள புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகர காவல் ஆணையர் உறுதி அளித்துள்ளார். மேலும், திருச்சி மாநகர சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கச் சொல்லி வழிகாட்டியுள்ளார்.
இதனையடுத்து கலைவாணி திருச்சி மாநகர சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் தங்களுக்கு இல்லை. எனவே, கோவையில் உள்ள GST அலுவலகத்திற்கு சென்று முறையிடவும் என போலீசார் தெரிவித்தனர்.
தனக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன, நான் எந்த தவறும் செய்யவில்லை என்னை அழைய வைக்கிறார்கள்.கோவை வரை என்னால் சென்று வர முடியாது. எனவே காவல்துறை உரிய நடவடிக்கை எடுத்து வங்கி கணக்கை மீட்டு தர வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார்.








