கோவை மே 19 கோவை வடவள்ளி அருகே உள்ள திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் பத்ரிநாத் ரங்காச்சாரி ( வயது 41 )இவர் டைட்டில் பார்க்கில்உள்ள ஐ.டி. நிறுவனத்தில் புரா ஜெக்ட் மேனேஜராக வேலை பார்த்து வருகிறார். வீட்டில் உள்ள தனது வயது முதிர்ந்த தாயரை கவனிக்க சிவகங்கை மாவட்டம் கெம்பனூர் பக்கம் உள்ள கண்ணன் குடி, சகாயபுரத்தைச் சேர்ந்த ஜேம்ஸ் மகள் மைக்கேல் ரூபி ( வயது21) என்பவரை ஹோம் நர்சாக பணிக்கு வைத்திருந்தார்..இந்த நிலையில் அவரது வீட்டில்பீரோவில் வைத்திருந்த 15 பவுன் தங்க நகைகளை திடீரென்று காணவில்லை. இது குறித்து பத்ரிநாத் வடவள்ளி போலீசில் புகார் செய்தார். புகாரில் தனது வீட்டில் ஹோம்நர்சாக வேலை பார்த்து வரும் மைக்கேல் ரூபி மீது சந்தேகம் இருப்பதாக கூறியிருந்தார். இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து மைக்கல் ரூபியை நேற்று கைது செய்தனர். அவரிடம் இருந்து 15 பவுன் தங்கநகைகள் பறிமுதல் செய்யப்பட்டது .அவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
வேலை பார்த்த வீட்டில் 15 பவுன் தங்க நகை திருடிய ஹோம் நர்ஸ் கைது.
