கோவை மாவட்டம் வால்பாறையில் ஆண்டுதோறும் இந்து முன்னணி சார்பாக விநாயகர் சதுர்த்தி விழா வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது அதேபோல இந்த ஆண்டு விநாயகர் சதூர்த்தி விழாவை முன்னிட்டு வால்பாறை சுற்றியுள்ள 60 க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு கடந்த நான்கு தினங்களாக பக்தி பரவசத்தோடு சிறப்பு பூஜைகள் செய்தும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கியும் வழிபாடு செய்து வந்தனர் அதைத்தொடர்ந்து ஐந்தாவது நாளான இன்று வால்பாறை ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் முன்பு பிரதிஷ்டை செய்யப்பட்ட அனைத்து சிலைகளையும் ஒருங்கிணைத்து விசர்ஜனத்திற்காக செண்டை மேளம் முழங்க ஆடல் பாடல் மற்றும் பக்தி பரவசத்துடன் நகர் பகுதி வழியாக சுமார் 53 சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் சென்று வால்பாறையில் உள்ள நடுமலை ஆற்றில் விமர்சனம் செய்யப்பட்டது முன்னதாக இந்து முன்னணியின் மாநில செயலாளர் சி.என்.அண்ணாத்துரை மற்றும் கோவை கோட்டச் செயலாளர் டி. பாலச்சந்தர் ஆகியோர் விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்புரையாற்றியதைத் தொடர்ந்து ஊர்வலத்தை தொடங்கி வைத்தனர் இந்து முன்னணியின் கோவை தெற்கு மாவட்ட துணைத் தலைவர் ஏ.எஸ்.டி. சேகர் தலைமையில் நகர தலைவர் ஆர்.சதீஷ்,நகர பொதுச்செயலாளர் ஆர்.எஸ்.லோகநாதன், நகர பொருளாளர் எம்.நாராயணன், ஒன்றிய தலைவர் சி.வி.ரவீந்திரகுமார்,ஒன்றிய பொதுச்செயலாளர் பி.எஸ்.ரமேஷ், முடீஸ் ஒன்றிய தலைவர் ஏ.செல்வராஜ்,முடீஸ் ஒன்றிய பொதுச்செயலாளர் கு.சுரேஷ்குமார் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்த இவ்விழாவில் சுமார் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்த நிலையில் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் சுமார் இருநூறுக்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப் பட்டிருந்தனர்
வால்பாறையில் காவல் துறையினர் பாதுகாப்புடன் இந்து முன்னணியின் விநாயகர் விசர்ஜன ஊர்வலம்..!
