தமிழ்நாட்டின் ஹீரோ நம்ம அண்ணாமலை – நடிகை நமீதா புகழாரம்.!!

மிழ்நாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவரது குடும்பம் வளர்ச்சி அடைய வேண்டும் என்றால் திமுகவுக்கு வாக்களியுங்கள் நீங்கள், உங்கள் அண்ணன், தம்பி, சகோதரர்கள் ஆகியோர் வளர்ச்சி அடைய வேண்டும் என்றால் பாஜகவுக்கு வாக்களியுங்கள் என பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் நமீதா தெரிவித்துள்ளார்.

சென்னை தங்க சாலையில் உள்ள கொண்டித் தோப்பு பகுதியில் பிரதமர் மோடியின் ஒன்பது ஆண்டு கால சாதனை விளக்கும் கூட்டம் சென்னை கிழக்கு மாவட்ட பாஜக சார்பில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக தமிழக பாஜக துணைத் தலைவர் கரு.நாகராஜன், மாநில செயற்குழு உறுப்பினர் நடிகை நமீதா ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேடையில் பேசிய மாநில செயற்குழு உறுப்பினர் நமீதா, “பிரதமர் மோடியின் ஒன்பது ஆண்டு கால ஆட்சியில் உலகில் முதல் நாடாக இந்தியா மாறி உள்ளது. நாட்டின் வளர்ச்சிக்காக பல்வேறு சிறப்பான திட்டங்களை பிரதமர் கொண்டு வந்துள்ளார். தமிழகம் சிறப்பான வளர்ச்சி அடைய வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பாடுபட்டு வருகிறார். அவர் தமிழ்நாட்டின் ஹீரோவாக உள்ளார் . மேலும் நாட்டின் வளர்ச்சிக்காகவும் மக்களுக்காகவும் ஆயுஷ்மான் யோஜனா, ஜல்ஜீவன் மெஷின், மெட்ரோ ரயில், வந்தே பாரத் ரயில் போன்ற திட்டங்களை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகள் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவரது குடும்பம் வளர்ச்சி அடைய வேண்டும் என்றால் திமுகவுக்கு வாக்களியுங்கள் நீங்கள், உங்கள் அண்ணன், தம்பி, சகோதரர்கள் ஆகியோர் வளர்ச்சி அடைய வேண்டும் என்றால் பாஜகவுக்கு வாக்களியுங்கள்” என்றார்.