கடும் போக்குவரத்து நெரிசல்… கோவை விளாங்குறிச்சி எஸ் பெண்டு அகற்ற முடிவு – பொதுமக்கள் வரவேற்பு..!

கோவை பீளமேடு பகுதியில் விளாங்குறிச்சி அமைந்து உள்ளது. இங்கு ஏராளமான வணிக நிறுவனங்கள், சிறிய சிறிய கடைகள் உள்ளன.

இந்த பகுதியில் குட்டி தீவு போன்று எஸ் பெண்டு அமைந்து உள்ளது. இந்த எஸ் பெண்டு வழியாக தான் விசாகப்பட்டினம் ஸ்டீல் நிர்வாகமும், டாஸ்மாக் குடேனுக்கும் செல்ல வேண்டும். இதனால் அந்த பகுதியில் எங்போதும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். சில நேரங்களில் விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது. இந்த எஸ் பெண்டை கடந்து தான் தண்ணீர் பந்தல், விளாங்குறிச்சி ரோடு, கொடிசியா ரோடு, காந்தி மாநகர் ரோட்டிற்கு செல்ல வேண்டும்.
எனவே இந்த எஸ் பெண்டை அகற்றினால் போக்குவரத்து நெரிசல் குறையும் என பொதுமக்கள் தொடர்ச்சியாக மாநகராட்சிக்கு மனு கொடுத்து வந்தனர். இதனையடுத்து மாநகராட்சி பரிசீலனை செய்து எஸ் பெண்டை அகற்ற முடிவு செய்து உள்ளது.

அதற்காக அங்குள்ள இடத்தை கையகப்படுத்த முடிவு செய்யப்பட்டது. நிலத்தை கையகப்படுத்த அங்குள்ள 11 பட்டாதாரர்களுக்கு ரூ.8 கோடி நிதி ஓதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து விளாங்குறிச்சி எஸ் பெண்டை அகற்றுவதற்கான பணியை மாநகராட்சி தொடங்க உள்ளது.
இதுகுறித்து அந்த பகுதியியை சேர்ந்தவர்கள் கூறும்போது, இந்த எஸ் பெண்டு ஒரு குட்டி தீவு போன்று அமைந்து உள்ளது. இதனால் இந்த சாலையில் செல்லும் போது கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. சில நேரங்களில் விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது.
இந்த எஸ் பெண்டு எடுக்கப்பட்டால் பீளமேடு, விளாங்குறிச்சி, கொடிசியா, காந்தி மாநகர், ஹோப்ஸ் செல்பவர்கள் எளிதாக செல்லலாம். பள்ளி, கல்லூரி, விமான நிலையம் செல்பவர்களுக்கு நேரம் சிக்கனமாகும் என்றனர். இந்த திட்டத்திற்கு பொதுமக்கள் வரவேற்பு அளித்து உள்ளனர்.