இன்று கோவை வந்தார் கவர்னர் ஆர் . என்.ரவி : ஜி20 மாநாட்டை தொடங்கி வைத்தார் – 1000 போலீசார் குவிப்பு..!

கோவை குனியமுத்தூரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா இன்ஜினியரிங் கல்லூரியில் மத்திய அரசின் ஜி 20 மாநாடு இன்று திங்கள்கிழமை நடக்கிறது.. இந்த மாநாட்டை தமிழ்நாடு கவர்னர் ஆர்.என். ரவி தொடங்கி வைத்தார். இதற்காக அவர் சென்னையில் இருந்து இன்று காலை 9 – 15 மணிக்கு கோவை வந்தார். விமான நிலையத்தில் அவருக்கு வரவேற்பு கொடுக்கப்பட்டது. பின்னர் அங்கிருந்து காரில் புறப்பட்டு ரேஸ்கோர்ஸ் உள்ள அரசினர் விருந்தினர் மாளிகைக்கு சென்றார். அங்கு சிறிது நேரம் ஓய்வு எடுத்தார் .இதையடுத்து அவர் கார் மூலம் குனியமுத்தூரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா இன்ஜினியரிங் கல்லூரிக்கு சென்று காலை 11 மணிக்கு ஜி 20 மாநாட்டை தொடங்கி வைத்து பேசினார். இந்த மாநாட்டில் மத்திய மந்திரி எல். முருகன் பங்கேற்றார்.கவர்னர் வருகையையொட்டி கோவையில் 1000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்..