கோவை : பல்லடம் அருகே உள்ள காளிவேலம்பாளையத்தைச் சேர்ந்தவர் நிவேதா (வயது 24) இவர் கோவை பீளமேட்டில் உள்ள தனியார் கல்லூரியில் 2018 ஆம் ஆண்டு படித்தபோது ஹோப் கல்லூரி பஸ் ஸ்டாப் அருகே அரசு பஸ் மோதி படுகாயம் அடைந்தார் .பின்னர் சிகிச்சைக்கு பிறகு உயிர் பிழைத்தார். இதனால் இழப்பீடு கோரி கோவை மோட்டார் வாகன விபத்து விசாரணை நீதிமன்றத்தில் நிவேதா மனுதாக்கல் செய்தார் . இதனை விசாரித்த நீதிபதி ரூ 7 லட்சத்து 54 ஆயிரம் இழப்பீடு வழங்க அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு கடந்த 20 22 ஆம் ஆண்டு உத்தரவு பிறப்பித்தார். கோர்ட் உத்தரவுக்கு பிறகும் இழப்பீடு வழங்க தவறியதால் வட்டியுடன் சேர்த்து ரூ 10 லட்சத்து 12 ஆயிரமாக அதிகரித்தது . இந்த தொகையினை வழங்க கோரி வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன் அதே நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை தொடர்ந்து அரசு பஸ்சை ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அதன்படி கோவை – சென்னை செல்லும் அரசு விரைவு பஸ் நேற்று ஜப்தி செய்யப்பட்டு நீதிமன்ற வளாகத்தில் நிறுத்தப்பட்டது.
விபத்தில் சிக்கிய மாணவிக்கு இழப்பீடு தொகை வழங்காத அரசு பஸ் ஜப்தி..!
