கோவை அருகே உள்ள பருவாய் கிராமத்தைச் சேர்ந்த லாவண்யா ஓட்டுநர் பயிற்சி பள்ளி உரிமையாளர் நாச்சிமுத்து -தனலட்சுமி அவர்களது மகள் லாவண்யா. ஜெர்மன் நாட்டைச் சேர்ந்தவர் பீட்டர் – மோனிகா மகன் டிமோ ஸ்ஷ்வாஸ். இவர்கள் இருவரும் ஜெர்மனியில் இன்ஜினியர்களாக வேலை செய்து வருகிறார்கள். கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இவர்களது காதலை பெற்றோர்களுக்கு தெரிவித்து திருமணம் செய்து கொள்வதாகவும் கூறினார்கள். இதற்கு இருவீட்டு பெற்றோர்களும் சம்மதம் தெரிவித்தனர். இதன்படி சட்டப்படியான பதிவு திருமணம் டென்மார்க்கின் அழகிய மற்றும் வரலாற்று நகரமான கிறிஸ்டியன்ஸ் பீல்டில் சிறப்பாக நடை பெற்றது . இது யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமாகும்.
இதைத் தொடர்ந்து ஜெர்மனியின் துடிப்பான நகரமான ஹாம்பர்க்கில் வரவேற்பு விருந்து நடத்தப்பட்டது. இந்த நிலையில் கோவை அருகே உள்ள ஒரு இந்து கோவிலில் இந்து முறைப்படி திருமணம் நடந்தது. தமிழ் கலாச்சாரப்படி மணமக்கள் பட்டு வேட்டி பட்டுச்சட்டை பட்டு சேலை அணிந்து கம்பீரமாக காட்சி அளித்தனர். பின்னர் சின்னியம்பாளையத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் வரவேற்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் லாவண்யா மற்றும் டிமோவின் அனைத்து நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர்.
இது குறித்து மணமக்கள் கூறியதாவது.
நாங்கள் ஒருவரை ஒருவர் அறிந்து, தெரிந்து, புரிந்து இந்த திருமணம் செய்து உள்ளோம். வாழ்ந்து காட்டுவோம். லாவண்யா எனக்கு மனைவியாக கிடைத்ததை ஒரு பாக்கியமாக கருதுகிறேன். என்று கூறினார்கள்..









