கோவை ஜூன் 2 கோவை தெற்கு உக்கடம், கோட்டை புதூர் பகுதியில் உள்ள ஒரு சாக்கு குடோனில் பணம் வைத்து சீட்டு விளையாடுவதாக கடைவீதி காவல் நிலையத்துக்குநேற்று மாலை தகவல் வந்தது. சப் இன்ஸ்பெக்டர் வசந்தகுமார் அங்கு திடீர் சோதனை நடத்தினார் .அப்போது பணம் வைத்து சீட்டு விளையாடியதாக அன்பு நகர் இஸ்மாயில் ( 59) கரும்புக்கடை இப்ராஹிம் ( 54) ஜி. எம். நகர் ரசாத் (60) புல்லுக்காடு அவுசிங் யூனிட் பஷீர் ( 48 ) பொன்விழா நகர் பைசல் ( 39 ) ஜி. எம். நகர் லத்தீப் (61) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். சீட்டுகளும், சீட்டு விளையாட பயன்படுத்தப்பட்ட ரூ 8,130 பணமும் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் விசாரணை நடந்து வருகிறது.
சாக்கு குடோனில்பணம் வைத்து சூதாட்டம் : 6பேர் கைது.
